Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை தின நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை(06) இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வையொட்டி பல்கலைக்கழத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சேர். பொன். இராமநாதன், ஆறுமுக நாவலர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை இடம்பெற்றது.
தொடர்ந்து பல்கலைக்கழகப் பேரவை மண்டபத்தினுள் சிரார்த்த தின குருபூசை தின நிகழ்வு இடம்பெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடந்த இந் நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் சைவ சமய அபிமானிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago