2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு…

Editorial   / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

வலய மட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் பங்குபற்றி மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் மலர் மாலை மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். 

அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் திங்கட்கிழமை (05) பாடசாலையில் நடைபெற்ற காலைக்கூட்டத்தின் போது இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி மற்றும் உப அதிபர்கள், மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மாகாண மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் :

தமிழ் அறிவு வினா விடை முதலாம் இடம் எஸ்.எச்.அன்ஹா மர்யம், ஆர்.எப்.ரிஸ்னாத், எம்.பீ.சப்ரா, ஜே.எப்.ஜஸ்னா, எஸ்.கவிஷா.

எழுத்தாக்கம் முதலாம் இடம் எம்.எஸ்.ஹயா.

பேச்சு ( பிரிவு 02): இரண்டாம் இடம் எம்.எப். அதா ஹானி

இலக்கிய விமர்சனம்  மூன்றாம் இடம்: ஜே.எப்.ஜஸ்னா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .