2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கையெழுத்து ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஜனவரி 02 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (02)  இடம்பெற்றது. போராளிகளின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவி  நகரில் குறித்த  கையெழுத்துப் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியல் கைதிகளையும்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த  கையெழுத்துப் ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

இதில் மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக பட்ட   அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 சண்முகம் தவசீலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X