2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

காசல்ரீ நீர்தேக்க பகுதியில் தீ

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரி நீர்தேக்க கரையோர வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காடு தீயினால் கருகி நாசமாகியுள்ளது.மலையகப்பகுதியில் அன்மைக்காலமாக கடும் வெப்ப காலநிலை நிலவி வருகின்றன. மேலும் விசமிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் விசம செயலினால் குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைவடைந்துள்ளது.

நீர்மின் உற்பத்திக்கு  அதிகளவான  நீரை சேகரித்து வைத்திருக்கும்  கேந்திர நிலையகமாக காணப்படும் காசல்ரி நீர்தேக்க கரையோரப்பகுதியிலும் காசல்ரி தோட்ட வனப்பகுதியிலும் விசமிகளினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக நீர்தேக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காசல்ரீ நீர்தேக்கம் மற்றும் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X