2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2023 ஜூலை 31 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்விற்கான 100 நாட்கள் செயல் முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மேல பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை -மகேசர் மைதானத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (31)  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதிகார பகிர்வு எமக்கு வேண்டும், சமஷ்டி அதிகார பகிர்வை உறுதிசெய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.அதை வேளை இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். 

தீஷான் அஹமட் , யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .