2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கறுப்புக்குள் மறைந்திருக்கும் இரும்பு முட்கள்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், இரும்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்களும் பெரும் அ​சௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்புலன்ஸ் வண்டிகள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், அம்புலன்ஸ், சுற்றுலாத்துறையினரை ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், தடுப்பு வேலிகளை அகற்றுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

இரும்பு கம்பிகளிலான வேலிகள் மட்டுமன்றி, இரும்பு முட்களைக் கொண்ட வேலிகளும் வீதிகளுக்கு இடையிடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த இரும்பு கம்பிகளிலான முட்களை மறைக்கும் வகையில், கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட் போர்த்தப்பட்டுள்ளது.

இரும்பு கம்பிகளுக்கு இடையிலான வேலிகளை தாண்டி முன்னோக்கி வரும் போராட்டக்காரர்கள், அந்த இரும்பு முட்களைக் கொண்ட ​வேலியை தள்ளினால், கட்டாயம் அவர்களை இரும்பு முட்கள் குத்தும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .