2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கறுப்பு ஜூலை நினைவேந்தல்

Mayu   / 2024 ஜூலை 23 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பு ஜூலை 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அலுவலகத்தில் நடைபெற்றது.

கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன்,  வடக்கு மாகாணசபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

கட்சியின் செயல்நிலை உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும், தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வி​னோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X