2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

கம்பன் விழா - 2024 இறுதி நாள்

Mayu   / 2024 ஜூன் 18 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா - 2024 இறுதி நாள் வௌ்ளவத்தை இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் திங்கட்கிழமை (17) மாலை நடைப்பெற்றது.

இதில், தமிழ்நாடு சரஸ்வதி சம்மான் விருதாளர் எழுத்தாளர் 'சிவசங்கரிக்கு' கம்பன் புகழ் விருதினை அமரர் வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை நினைவு அறக்கட்டளையின் சார்பாக குடும்ப அங்கத்தவர்கள் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், வைத்தியர். சண்முகம் ஸ்ரீதரன் “கம்பகலாநிதி“ விருதையும், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் விருதையும், வடமாகாண பிரதம செயலாளர் லச்சுமணன் இளங்கோவன் “கம்பவாணர்“ அருகிணி விருதினையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின்  முன்னாள் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய “வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை விருதையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் “கம்பன் அடிப்பொடி“, சா.கணேசன் விருதையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் “மாகாவித்துவான்“ சி.கனேசையர் விருதையும் பெற்றுக்கொண்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X