2025 மார்ச் 13, வியாழக்கிழமை

கனடாவில் வசிப்பவரால் 3 வீடுகள் கையளிப்பு...

Editorial   / 2023 டிசெம்பர் 15 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பிறந்து தற்போது கனடாவில் வசிக்கும் மணி பிரதீப்ராஜின் முழுமையான நிதி அனுசரணையில் பதுளை மாவட்டம் ,லுணுகலை, ஹொப்டன் போன்ற தோட்ட புறங்களில் வாழும் வசதி குறைந்த விசேட தேவையுடைய மூன்று குடும்பங்களுக்காக சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், ஸ்ரீதரன் ராமச்சந்திரன்,  விஜேகுமார்  ஆகியோரால் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அத்துடன், இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் லுணுகலை உதவி பொலிஸ் அத்தியட்சகர், லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, லுணுகலை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரதிபணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள்,  அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்திருந்தார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .