Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வுகள், கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி. வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மலையகத்தில் வாழும் இந்திய குடும்பங்கள் உட்பட அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் பிரதிநிதிகள் மற்றும் அனுநாயக்க தேரர்கள், இந்து, இஸ்லாமிய சமய பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், கண்டி தமிழ் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர், இந்திய குடியரசு தலைவரின் ஆசிச் செய்தியை உதவி உயர்ஸ்தானிகர் திருமதி. வீ.எஸ்.சரண்யா வாசித்தார்.
எஸ்.கணேசன், பா.திருஞானம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .