2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

கச்சதீவு திருவிழா...

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை(15)பிற்பகல் ஆரம்பமானது.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட் தந்தை லூர்து ஆனந்த் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர்  தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(16) காலை ஏழு மணிக்கு திருவிழா  சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வருகைதந்திருந்த மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனைத்  தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை(16)  நிறைவுபெற்றது.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X