2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ஒளடதங்கள் மீட்பு...

Editorial   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

4.5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான பெறுதியைக் கொண்ட ​ஒளடதங்கள் அடங்கிய பொதியை மன்னார் கடல்கரையோரத்தில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் நடுகுடா கரையோர பிரதேசத்தில் ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே, இவை கைப்பற்றப்பட்டன என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடல் வழிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஜபா கப்பலின் ஊடாக, இலங்கை கடற்படையினரால் மன்னார், நெடுகுடா கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டன.

பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  ஒளடதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .