2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து வான் கதவுகள் திறப்பு...

Editorial   / 2024 மே 30 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், பொல்கொல்ல நீர்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் வியாழக்கிழமை (30)  திறக்கப்பட்டுள்ளன என  மஹாவலி அதிகார சபையின் பொல்கொல்ல காரியாலயம் தெரிவித்துள்ளது.

 வான் கதவு ஒன்று, ஒன்றறை மீட்டர் வீதம் ஐந்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதனூடாக ஒரு  வினாடிக்கு (செக்கன்)  19,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக அக் காரியாலயம் தெரிவித்தது.

 மஹாவலி கங்கையில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளமையால், கங்கையை பயன்படுத்துவோரும், கரை​யோரங்களில் வாழ்பவர்களும் அவதானமாக இருக்க வேண்டுமென அக்காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.

​மொஹமட் ஆசிக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X