2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

எலிக்காய்ச்சல் விழிப்புணர்வு நடைபவனி

Mayu   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலிக்காய்ச்சலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கிணங்க அட்டாளச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் பாலமுனை விவசாய அபிவிருத்தி நிலையம் மற்றும் கமநல சேவை நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்க்கிழமை (30) அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விவசாய அபிவிருத்தி நிலையம் மற்றும் கமநல சேவை நிலையம் என்பவற்றின் உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

றியாஸ் ஆதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X