Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 06 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன துறையில் ஈடுபட்டு வருபவர்கள் ஆர்வத்துடனும் சிறப்பாகவும் இத்துறையில் ஈடுபட்டால், சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி தாங்களும் ஒரு சாதனையாளர்களாக வரமுடியும் என கம்போடியாவில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி இலங்கை சார்பாக மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்ட அனிதா விநாயக காந்தன் தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன(APHCA) போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தை கோல்ட் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்றது.
மணப்பெண் மற்றும் சிகையலங்கார முக ஒப்பனையில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த அனிதா விநாயக காந்தன் தெரிவிக்கையில்,
"ஆசிய பசுபிக் சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன துறை (அப்கா-APHCA)"தலைவர் சஹான் குணசேகர மற்றும் செயலாளர் ஹசினி குணசேகரவுடன் நடுவராக பங்காற்றிய ஹேமி விஜயசிங்கம் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
இச்சர்வதேச இப்போட்டியானது கம்போடியாவில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் மணப்பெண் மற்றும் சிகையலங்கார துறையில் ஈடுபட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த அனிதா விநாயக காந்தன், யமுனா நடராஜா, புஸ்பலதா விஜயரங்கர், நிதர்சனா திலக்ஷன், சுலக்ஷனா வோல்டன் சஞ்சீவன், சசிகலா தம்பிராஜா மற்றும் சிவகுமாரி சுமன் ராஜ் ஆகிய சிறந்த ஏழு பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 17 நாடுகள் பங்குபற்றிய நிலையில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
அதேவேளை கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் முதலாம் இடத்தை கம்போடியாவும் இரண்டாமிடத்தை தாய்வானும் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .