2025 மார்ச் 13, வியாழக்கிழமை

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…

Editorial   / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு, யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நடராசா அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் வாசித்திருந்தார். 

இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயர் நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத்தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார். 

இந் நிகழ்வில் மத்த்தலைவர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் கல்வியிலாளர்கள். பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  எஸ்.நிதர்ஷன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .