2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Janu   / 2025 மார்ச் 26 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட  மாணவர்   சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக யாழ். நகருக்கு செல்ல முற்பட்ட போது  பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

“இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் கிஸ்னுயன் பின்வருமாறு தெரிவித்தார் “தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து தாதியியல் , மருந்தாக்கவியல் ,மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்   , ஆகிய பதவி நிலை வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்களை உள்ளீர்ப்பதற்காக அரச பல்கலைக்கழகங்களில் முன்னபோதும் இல்லாத வகையில் பொது உளர் சார்பு பரீட்சை இணை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது . இந்தப் பரீட்சை எமக்கு தேவையற்ற ஒன்று எனவும் நான்கு வருடங்கள் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற எமக்கு  வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் இவ்வாறான தடை தாண்டல் பரீட்சைகள் எங்களுடைய தகுதியை தீர்மானிப்பதாக அமையவில்லை மேலும் இதுவரை காலமும் பாடப்பெறுமதிக்கான தரப்புள்ளி சுட்டெண் ( GPA) இன் அடிப்படையில் பல்கலைக்கழகம் மூலம் பதவி நிலை வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஆனால் தற்பொழுது ஜிபிஏ சுட்டங்களை கொண்டிருக்காத தகுதியற்றவர்கள் கூட  வேலை வாய்ப்பு இணைத்துக்கொள்ளப்படலாம் ஆகவே இது நிறுத்தப்பட வேண்டும் என ” தெரிவித்தார் 

இதேவேளை பொலிஸ் புலனாய்வாளர்கள் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த பகுதிக்கு விரைந்து போராட்ட களத்தை பார்வையிட்டு சென்றமை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .