2024 நவம்பர் 02, சனிக்கிழமை

அடையாளச் சாவி கையளிப்பு...

Editorial   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கோட்டை வளாகத்தில் இன்று (07)   இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த பேருந்துக்கான அடையாளச் சாவி கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடக்க நிகழ்வாக, நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட  VTA வின் தொழில் பேருந்து ஆனது, உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை,தொழில் சோதனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக இலங்கையின் தென் முனையில் உள்ள தேவேந்திர முனை முதல் வடக்கில் பருத்தித்துறை வரை ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.

நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், USAID மிஷன் உயர் அதிகாரிகள், தொழில் பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .