2025 மார்ச் 12, புதன்கிழமை

அடுத்த படைக்கலச் சேவிதருக்கு செங்கோல், வாள் கையளிப்பு

Mayu   / 2024 ஜனவரி 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெறும் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து, அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் ஆகியவற்றை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு   பாராளுமன்ற சபை மண்டபத்தின் நுழைவாய்க்கதவுக்கு அருகில், செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து 42 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றி செவ்வாய்க்கிழமையுடன் (30) ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழக்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் 6 வது படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து, 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றினார். அதற்கமைய பாராளுமன்றத்தின் 7 வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன புதன்கிழமை (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .