Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் - ITEC - ஊடாக இந்தியா இலங்கை இடையிலான 59 வருட திறன் விருத்தி பங்குடைமையினைக் கொண்டாடும் முகமாக 2023 செப்டெம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2023 ITEC தினம் கொண்டாடப்பட்டது.
உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோர் முறையே பிரதம விருந்தினராகவும்
விருந்தினராகவும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கையைச்சேர்ந்த ITEC முன்னாள் மாணவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ITEC திட்டங்களின் கீழ் இந்தியாவில் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிய வல்லுநர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்:
இந்தியா இலங்கை இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவினை பாராட்டியிருந்தார். அத்துடன் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்தமைக்கும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டதுடன் இந்த திட்டத்தில் இந்திய
பெண்களின் வகிபாகத்தை மிகவும் விசேடமாக பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ITEC பயிற்சிகள் மற்றும் இலங்கையர்களுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டங்கள் போன்றவற்றையும் இச்சந்தர்ப்பத்தில் மெச்சியிருந்த அவர், கடந்தஅண்மைய மாதங்களில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்காகவும் நன்றியினைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக STEM(விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் உயர் கல்வி, திறன்விருத்தி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் இந்தியா-இலங்கை இடையிலான மேலதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்பினையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இதன் மூலமாக இந்தியா இலங்கை இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கும் பங்களிப்பு வழங்குமாறு ITEC பயனாளிகளை அவர் ஊக்குவித்திருந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே:
ITEC திட்டத்தின்மீது கடந்த பல வருடங்களாக இலங்கை அதிகாரிகள்காட்டிய பேரார்வத்தை குறிப்பிட்டார். தற்போது வருடாந்தம் வழங்கப்படும் 402 ITEC ஆசனங்களைத் தவிர, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில்
காணப்படும் ஒத்துழைப்பின் மூலம் உயர் கல்வி உட்பட கல்வித்இலங்கைக்கு உதவுவதற்கான இந்தியாவின் முயற்சியையும் பிரதி உயர் ஸ்தானிகர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ‘உலகம் ஒரே குடும்பம்’ எனப்படும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவத்தின் மூலம் இந்தியா வழிநடத்தப்படுவதாகவும், இலங்கைக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியா தொடர்ந்தும் முன்னரங்கில் இருக்கும் என்றும் பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஸ்ட அதிகாரிகள்,
இந்தியாவில் ITEC பயிற்சியின்போதான தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அத்துடன் பாலினத்திற்கு முக்கியத்துவமளிக்கும் ஆட்சி, கால நிலை மாற்ற கொள்கை அபிவிருத்தி மற்றும் ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகளை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு, நான்கு புள்ளி பூச்சியம் தகைமைக்கு (4.0) தொழில்துறையினை ஒருங்கிணைத்தல், கல்வி நிறுவனங்களில் 21ஆம் நூற்றாண்டு திறன்கள் மற்றும் பாராளுமன்ற வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் போன்ற பலவகையான துறைகளையுமுள்ளடக்கியதாகக் காணப்படும் இந்த ITEC திட்டங்களின் முழுமையான உள்ளடக்கத்தினையும் பாராட்டினர்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் திறனை மேம்படுத்துவதற்காகவும் தொழில்நு௶ப உதவிகளை வழங்குவதற்காகவும் 1964 செப்டெம்பரில் ஸ்தாபிக்கப்பட்ட ITEC
நிகழ்ச்சித் திட்டமானது இந்திய அரசாங்கத்தின் முன்னோடியான திட்டமாகும். அபிவிருத்தி அடைந்துவரும் சக 160 நாடுகளைச் சேர்ந்த 200,000 க்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளதால், நட்பு நாடுகளின் மனித வள மேம்பாட்டிற்கான இந்தியாவின் பங்களிப்பிற்கான முக்கியமான சக்தியாக இது உருவெடுத்துள்ளது. ITEC திட்டத்திற்காக இலங்கைக்கு தற்போது வருடாந்தம் 402 பயிற்சி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் இந்த தனித்துவமான முயற்சியைக் குறிக்கும் வகையில் உலகெங்கிலும்
உள்ள இந்திய தூதரகங்களால் ஒவ்வொரு ஆண்டும் ‘ITEC தினம்’ கொண்டாடப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago