Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Editorial / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள் விஜயமாக 26 ஆம் திகதி X கஸ்ட் 2024 கொழும்புக்கு விஜயம் மேற்கொள்கின்றது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்படும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும். மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது. இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது. இக்கப்பல் இலங்கையின் எந்தவொரு துறைமுகத்திற்கும் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். அத்துடன் இவ்வருடத்தில் இந்திய கப்பல்களின் எட்டாவது துறைமுக விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.என்.எஸ் கப்ரா, கரன்ச், கமோர்தா மற்றும் சால்கி ஆகியவை இவ்வருடத்தில் வருகை தந்ததுடன் அதற்கு மேலதிகமாக இந்திய கரையோர காவல் படையின் கப்பல்களான சமர்த், அபிநவ் மற்றும் சச்செட் ஆகியவையும் விஜயம் மேற்கொண்டிருந்தன.
இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் ஐஎன்எஸ் மும்பை கப்பலில் எடுத்துவரப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த டோனியர் விமானம் இலங்கையின் சேவையில் இணைக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் இலங்கைக்கு சொந்தமான கடற் பிராந்தியத்தில் தனித்துவமானதும் முக்கியமானதுமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இலங்கையின் பரந்த EEZ வலயத்தில் இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு திறன்களும் இதன் மூலமாக மேம்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையைச் சேர்ந்த விமானிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக தொழில்நுட்ப குழுவினர் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வழங்கி இந்த விமானத்தின் பராமரிப்பு பணிகளுக்கு இந்திய கடற்படை ஆதரவை வழங்கி வருகிறது. இதேவேளை இவ்வருட முற்பகுதியில் விஜயம் செய்திருந்த இந்திய கப்பல் ஒன்று இவ்விமானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கியிருந்தது. ஐஎன்எஸ் கப்ரா மற்றும் ஐசிஜி சஜெட் ஆகியவை இலங்கையின் கரையோர காவல்படையின் கப்பலான சுரக்ஷாவுக்கு தேவையான உதிரி பாகங்களை எடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இருகடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளனர். இம்மாத முற்பகுதியில் திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகாடமி கெடற் அதிகாரிகள் மற்றும் மாணவ நிலை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சிகள் இம் மாத முற்பகுதியில் விஜயம் மேற்கொண்டிருந்த சால்கி நீர்மூழ்கி கப்பலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை அவர்களின் பயிற்சிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் இலங்கை கடற்படையினரின் திறன் விருத்தினை இலக்காகக் கொண்டு இந்தியாவின் முக்கிய நீர்ப்பரப்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விசேட பயிற்சிகள் உட்பட பல பயிற்சி நெறிகளும் இந்திய கடற்படையால் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இக்கப்பலின் விஜயத்தின்போது மேற்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டபிள்யூ டி சி யு குமாரசிங்க அவர்களை இக்கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை பிராந்திய தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார். அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளது.
அரபுக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுக்கு இடையில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை துறைமுகங்களுக்கு விஜயம் செய்கின்றமை வழமையான செயற்பாடாகும். எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாட்டு விஜயமாகவே இவ் விஜயம் அமைகின்றது. இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ் விஜயத்தின்போது கிடைக்கப்பெறுவதுடன் நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதேபோல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஐஎன்எஸ் மும்பை 2024 ஆகஸ்ட் 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago