2025 மார்ச் 12, புதன்கிழமை

8 இலட்சம் ரூபா பெறுமதி கேரள கஞ்சாவுடன் நபர் கைது

Editorial   / 2024 மார்ச் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன், நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ருவன்வெலிசாய விஹாரைக்கு முன்னால் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் வைத்தே, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

அநுராதபுரம் வழிபாட்டுத்தல பகுதியில் விநியோகம் செய்யும் நோக்கத்தில், இந்த கஞ்சா கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, 4 கிலோ 250 கிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், 32 வயதுடைய கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர், அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .