2025 மார்ச் 13, வியாழக்கிழமை

43 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு...

Editorial   / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை(1) காலை 10 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,கலையருவி இயக்குனர் அருட்தந்தை செல்வநாயகம் அடிகளார்,மன்னார் தமிழ் சங்கத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் -  எஸ்.றொசேரியன் லெம்பேட் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .