2025 மார்ச் 13, வியாழக்கிழமை

143 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி

Janu   / 2023 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி வியாழக்கிழமை (17) காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும்  முன்னெடுக்கப்பட்டது.

"தாய்மடியாக இருந்து எமக்கு கல்வியூட்டிய பாடசாலை தாயின் பெருமையினை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்வோம் வாரீர்" எனும் தொனிப்பொருளில் மாதகல் லூர்து அண்ணை ஆலயத்தில் கல்லூரியின் வரலாற்றினை மாணவர்கள் கூத்து மூலம் வெளிப்படுத்தி பின்னர் வாகன பேரணி மாதகலூடாக பண்டத்தரிப்பினை அடைந்து  பின்னர் மீண்டும் பாடாசாலையினை வந்தடைந்தது.

இதன்பொழுது பாடாசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்,அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .