2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

100வது ஆண்டு நிறைவு விழாவில் ...

Freelancer   / 2024 மே 11 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பை ஆராய அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தரின் பிரசங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுப் பணிகள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

புதிய சட்டங்களை ஏற்றுக்கொண்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில் இன்று (11) நடைபெற்ற மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X