Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூன் 09 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
இலங்கையின் 13 வது திருத்தச் சட்டத்தை நான் முழுமையாக அமல்படுத்துவேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பாரதி வித்யாலயத்திற்கான திறன் வகுப்பறைக்கான கணினி மற்றும் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில், ஞாயிற்றுக்கிழமை (09) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிளிநொச்சி பாரதி வித்யாலயத்தில் 647 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள் இங்கே பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. 11 இலட்சம் ரூபாய் பெறுமதி ஐந்து கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போர்ட் பிரிண்டர் என்பவற்றை அன்பளிப்பு செய்திருக்கின்றேன்
இலங்கையில் உள்ள மாணவர்களுக்கான அனைத்து சுதந்திரமான கல்வி நடவடிக்கைக்காக பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக இதுவரை 225 பாடசாலைகளுக்கு 251.4 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளோம் இது ஒரு அரச நிதியோ அல்லது அரச ஒதுக்கீடோ அல்ல இதைவிட 87 பாடசாலைகளுக்கு 424.1மில்லியன் ரூபாய் செலவில் பஸ் வண்டிகளை வழங்கி இருக்கின்றேன். இதைவிட 1083.1 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை பூராகவும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கி இருக்கின்றேன்
நான் எதிர்க்கட்சியாக இருந்து இவ்வாறான சேவைகளை ஆற்றி வருகின்றோம் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 76 வருடங்களாக செய்யாத வேலையை எந்த அரச நிதியும் இல்லாமல் செய்வதையிட்டு நான் மகிழ்வு அடைகின்றேன்
எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அபிவிருத்தி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் ஒவ்வோர் அரசியல்வாதிகளும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றார்கள்
சர்வதேச ரீதியாக ஒரு சிமார்ட் முறையிலான கல்வியை அறிமுகப்படுத்துவோம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்கும் பொறுப்பு இந்த அன்பளிப்பின் ஊடாக உள்ளது
இலங்கையில் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் கொடுக்கின்றேன் சர்வதேச தொழிலாளர் தினத்திலும் நாங்கள் இந்த விடயத்தை அறிவித்திருந்தோம்
எங்களுடைய நாட்டிலே சட்டரீதியான அரசியலமைப்பிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது எனவே வடக்கு கிழக்கு தெற்கு என்று ஒன்பது மாகாணங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களுடைய நாட்டுக்கு நான் அறிவிக்கின்றேன்
இந்தப் பிரதேசம் அரசியல் ரீதியாக சமூக ரீதியாக சமய ரீதியாக எங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்-55
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago