Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 மே 14 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரன தர பரீட்சை தற்போது இடம்பெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன .பாடத்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யாத காரணத்தால் ஒருசில பாடப் பிரிவுகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.
பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருசில பிரிவுகளில் இருந்து இம்முறை விஞ்ஞான பாடத்துக்கு கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.ஒருசில கேள்விகளுக்கு விடை இல்லை,ஒரு கேள்விக்கு பல விடைகள்,ஒருசில கேள்விகளுக்கு விடையே இல்லை, இவ்வாறான சிக்கல்கள் விஞ்ஞான பாட வினாத்தாளில் இருந்துள்ளன .இதனால் பரீட்சார்த்திகள் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகள் வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இவை 12 புள்ளிகளை கொண்டவை .கற்பிக்காத பாடப்பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கும் போது பரீட்சார்த்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல் இம்முறை ஆங்கில பாடத்தின் கேள்விகள் வழமையான முறைமைக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன.மத்திய மாகாணத்தில் பயிற்றுவிக்கப்பட்ட 5000 ஆங்கில பாட ஆசிரியர்களுக்காள கேள்வி காணப்படுகிறது.அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒருசில பாடசாலைகளில் இராணுவத்தினரே ஆங்கில பாடத்தை கற்பிக்கிறார்கள்.
ஆகவே வழமையான கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் போது பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை கல்வி அமைச்சு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago