2024 நவம்பர் 23, சனிக்கிழமை

ரொஷான் ரணசிங்கவுக்கு கால அவகாசம்

J.A. George   / 2023 நவம்பர் 30 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிராக மனுவுக்கு ஆட்சேபனையை தெரிவிக்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மேல் நீதிமன்றம்  கால அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(29) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையை சவாலுக்குட்படுத்தி சட்டத்தரணி ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனு இன்று (30) மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது ஆட்சேபனைகளை ரொஷான் ரணசிங்க நீதிமன்றில் முன்வைக்க முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த மனு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X