2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ரத்துபஸ்வல சம்பவம் ; இராணுவ மேஜர் உட்பட 4 பேர் விடுதலை

Editorial   / 2024 மே 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) தீர்பளித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி அன்று வெலிவேரிய, ரத்துபஸ்வல  பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 45 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .