Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது என, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஆகையால், அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை என்றும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ், நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
7 hours ago