2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி?

Freelancer   / 2024 ஒக்டோபர் 19 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது சிறப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பும் முகமாக, முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் முன்னணியொன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என, முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.

பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம். அண்மையில் நடத்திய அறிவார்ந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிகள் பலர் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இது தொடர்பான விடயங்களை முன்வைத்துள்ளனர்.

வாழ்வதற்குரிய சிரமங்கள் தொடர்பான பெரும்பாலான விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகள் அதிகம் என்ற சமூகப் பேச்சு காரணமாகவே அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X