2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

“மக்கள் ’ஐசிங் கேக்’கைக் கண்டு ஏமாற மாட்டார்கள்”

Editorial   / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஆண்டு நடாத்தவிருந்த பொதுத் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் (09) குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தால் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“தேர்தல் சட்டதிருத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் இதை செய்கிறது. அரசாங்கம் கையாளும் இந்தத் தந்திரமானது நஞ்சு கலந்த ஐசிங் கேக் போன்றது. இந்தக் கேக் துண்டைக் கண்டு இந்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

மக்களின் இறையாண்மையை தட்டிக்கழிக்கும் அரசாங்கத்தின் தேர்தலைத் தள்ளிப்போடும் செயல்பாடானது பெரும் அழிவையே தரும். தேர்தல் ஒத்திவைப்புகளை இலங்கையானது ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. அந்த இருள் சூழ்ந்த நாட்களுக்கு மீண்டும் இலங்கையை கொண்டு செல்லத் தான் இந்த அரசாங்கம் முயல்கிறது.

ஒத்திவைப்பதற்கு தேர்தல்களே இல்லை என, தேர்தலை நடாத்துமாறு முன்வைக்கப்படும் வலியுறுத்தல்களை ஏளனப்படுத்தும் ஜனாதிபதியிடமிருந்து நாம்  தேர்தலை எதிர்பார்க்க முடியாது”.

ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் நசுக்க முயலும் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்” என அவர் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X