Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் உள்ளடங்கிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் ஏழாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தம் தொடர்பில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தை இம்மாதம் 31ஆம் திகதிககு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த (17) ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதனால் இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட இ.தொ.கா பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சுயத்தனிமை பேணுமாறு சுகாதார தரப்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுயத்தனிமை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு தொற்று இல்லை என உறுதியானாலும் இன்னும் சிலருக்கு சுகாதார அறிக்கை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று 31ஆம் திகதி இடம்பெறவிருந்த சம்பள பேச்சுவார்த்தையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பங்கு கொள்வதை இ.தொ.கா.விலக்கியிருந்தது.
அத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
40 minute ago
3 hours ago