2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புதிய வகை கொரோனா பரவியது இவ்வாறு

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் எனவும் ஏனையோரில் ஒருவர் அவிசாவளை பிரதேசத்திலும் மற்றைய இருவர் கொழும்பு பகுதியிலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், மேற்படி வைரஸ் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்ட தொற்றுடன் ஒத்ததென கண்டறியப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .