2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

’பாலின சமத்துவம்’ சட்டமூலம் முரணானது என வியாக்கியானம்

Mayu   / 2024 ஜூன் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பாலின சமத்துவம்'  சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது.எனவே  நீதிமன்றத்தின் திருத்தங்கள் இல்லாமல்  நிறைவேற்றுவதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன  வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

'பாலின சமத்துவம்'  சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  சபைக்கு செவ்வாய்க்கிழமை (18) அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'பாலின சமத்துவம்'  சட்டமூலம் தொடர்பில்  உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை சபைக்கு அறிவிக்கிறேன்.

சட்டமூலத்தின்  ஒருசில  உறுப்புரைகள்  அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்கு முரணானது . மேலும் அவை சட்டமூலத்தின்  பிற விதிகளிலிருந்து பிரிக்க முடியாதவை. அரசியலமைப்பின்    ஏற்பாடுகளுக்கு அமைய  இந்த சட்டமூலத்தை முழுமையாக ஒட்டுமொத்தமாக சட்டமாக்க முடியாது  

அவ்வாறு நிறைவேற்றுவதானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் ஆதரவாக வாக்களிக்க  வேண்டும் மற்றும் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை முழுமையாக நிறைவேற்றாமல் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது.உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களை நிறைவேற்றாமல் சட்டமூலத்தை நிறைவேற்றுவதானால் பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X