2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளிலும் கொவிட் கொத்தணி

Editorial   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்குள்ளும் கொவிட் கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

அவ்வாறில்லை எனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். 

நாட்டில் மீண்டும் கொவிட் - பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலானோர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். 

இதனால் சில இடங்களில் கொவிட் - கொத்தணிகளும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதிகரித்துவரும் கொவிட் தொற்று பவலைக் கட்டுப்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகப் பிரிவினருடையதாகும். 

அதேபோன்று மாணவர்களும் , பெற்றோருக்கும் சுகாதார விதிமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுமாறு பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்தும் அறிவுறுத்த வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X