2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பவித்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள் இரண்டிலும் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரையில் மூன்று அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .