2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பல பொருட்களின் விலைகள் குறைந்தன

J.A. George   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் வியாழக்கிழமை (19) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாயாகும்.

இதேவேளை, உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 545 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம்பயறு விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் நெத்தலி விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம்கொத்தமல்லியின் விலை ரூ.10 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.540 ஆக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X