Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2022 மார்ச் 26 , மு.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. மறுபுறத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது.
நேற்றுக்காலை 10.30க்கு ஆரம்பமான சந்திப்பு, சுமார் 3 மணிநேரம் நீடித்தது. ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பு என்பதால், இருதரப்பினரும் மனம் விட்டு, கலந்துரையாடியுள்ளனர். எனினும், சம்பந்தன் அவ்வப்போது ஆவேசப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரசாங்கத் தரப்பில் இருந்து பல விடயங்களுக்கு உறுதியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
இந்த சந்திப்பின் போது, “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்”, “அரசியல் தீர்வு”, “காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்”, மற்றும் “வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு” உள்ளிட்ட நான்கு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த இரா.சம்பந்தன். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அதி முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். 13 இல்லையெனில் பேசிப் பயனில்லையென இடித்துரைத்துள்ளார்.
ஆனாலும், 13ஆவது திருத்தத்தில். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டபோது, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி, “கடந்தகால அரசாங்கங்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகையால், தமக்கும் சிக்கல்கள் உள்ளனவென தெரிவிக்கையில், சம்பந்தன் சற்று ஆவேசமடைந்து மேசையில் தட்டி, 13யை முழுமையாக அமுல்படுத்தாவிடின் நாங்கள் ஏன்? பேசவேண்டுமென கேட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி “13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த முடியாதென நாம் கூறவில்லை, முழுமையான அதிகாரப்பகிர்வுக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்” என பதிலளித்துள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
நல்லது, ஆனால், அதற்கு முன்னர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வு அவசியம் என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து எடுத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம். தமது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என எடுத்துரைத்துள்ளது. அதன்போது பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “ஒரு இலட்சம் ரூபா நிதி, முழுமையான நட்டயீடு அல்ல, ஒரு நிவாரண தொகையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மகாவலி எல் வலயத்தின் ஊடாக கடந்த 35 ஆண்டுகளாக காணிகள் அபகரிக்கப்படுகின்றது, அத்துடன், இனப்பரம்பலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பு வலியுத்தியு்ளளது. காணி அபகரிப்புகள் இடம்பெறுமானால் தடுத்து நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024