2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நாட்டில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதியுட்ச கொரோனா மரணங்கள்

J.A. George   / 2021 மே 08 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19  மரணங்கள் பதிவாகியுள்ளதை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான மரணங்களே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கமைய, சுனந்தபுர, இளவாலை, கோங்கஹவெல, இரத்மலானை, தெய்யத்தகண்டி, பதுளை- மயிலகஸ்தென்ன, வாத்துவ, கொழும்பு-3, ரத்தொழுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தனர்.

அத்துடன், ராகமை, அலபலாதெனிய, அங்குலுகஹ, ஹிக்கடுவ, நுவரெலியா-ஹாவாஎலிய, அநுராதபுரம் மற்றும் அங்குலுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தனர்.

இதுதவிர, போத்தல பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்ததுடன், 68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X