Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 31 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.
தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.
அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago