2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

“தவறுகளை திருத்த கால அவகாசம்”

Editorial   / 2025 ஜனவரி 08 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உபகரணங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சபை உறுப்பினர்  ரொஷான் அக்மீமன, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ் பாகங்கள் தொடர்பான சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டு வரவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, புதிய அரசாங்கம் வந்ததும் பொலிஸாரும் நல்லெண்ணத்துடன் சட்டத்தை அமுல்படுத்த சென்றதுதான் இங்கு நடந்தது எனவும் தெரிவித்தார். .

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் துணைக்கருவிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்றும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சட்ட முறைமைகளுக்கு இணங்க கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X