Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 15 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன் ஓர் ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலிலும் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி செய்கிறது என்றார்.
வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்மந்தமான வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாக கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு வரவிருக்கின்ற காரணத்தினால் அது குறித்து உரையாடப்பட்டது.
நாங்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்த யோசனையின் விபரங்கள் நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம். ஆனால் பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என இணங்கப்பட்டிருக்கிறது. முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில் இடம்பெற்றது. 8 எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கில் அழைப்பார்கள். கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய இடையீட்டு மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கிறது.
அதனால் வழக்கு தள்ளிப் போகக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால் அதை தவிர நாங்கள் அனைவரும் மறுமொழி அனைத்து, இப்பொழுது குடியியல் நடவடிக்கைகள் சட்ட மூலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அமைவாக வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டத்தரணிகள் சகிதம் நீதிபதியோடு ஒரு கலந்துரையாடல் நடத்தப்படவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் தான் வழக்கை சுமுகமாக தீர்க்கக கூடிய வழிகள் என்ன என்பதை நீதிபதியோடு இணைந்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் சட்டப்படியாக இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம் திகதி மறுமொழி வழங்கிய பின்னர் ஒரு திகதியை தீர்மானித்து கலந்துரையாடலை மேற்கொண்டு வழக்கை என்ன மாதிரி முடிவுறுத்தலாம் என்ற தீர்மானத்திற்கு வரலாம். அதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூடி எடுக்கப் போகும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடி இணக்கப்பாட்டை தெரிவிக்கும்.
கட்சியின் தெரிவுகள். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தெரிவுகள் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒரு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதனுடைய பிரதிபலன் என்னவென்றால் அதற்கு முன்னிருந்த தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கட்சியினுடையய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன் ஒரு ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
பாராளுமன்ற குழுதத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடியது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago