Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜனவரி 06 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, இந்தியாவால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொவிட்-19 தடுப்பூசியை, தேவைக்கேற்ப சரியான மதிப்பீட்டுக்குப் பின்னர் கொள்வனவு செய்வதற்கு, இலங்கை விரும்புகின்றது என்றார்.
ஏனைய நாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா-இலங்கை இருதரப்பு உறவை மேம்படுத்தவும் பரஸ்பர நன்மைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஜனாதிபதியும் இந்திய அமைச்சரும் ஒப்புக்கொண்டனர் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
3 hours ago