Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜனவரி 10 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்த நியமனத்தை நாளை வழங்கவுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உதவி செயலாளர்களில் ஒருவரும் கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளார்.
இவருக்கு பதவி உயர்வு நியமனக் கடிதம் திங்கட்கிழமை (11) வழங்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ராஐமணி பிரசாத்தை காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக்குவது தொடர்பில் காங்கிரஸ் உயர் மட்டத்தினர் கலந்து பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான், ராஜமணி பிரசாத்தை இளைஞர் அணி தலைவராக நியமிக்க உள்ளதாக இன்று (10) மாலை தெரிவித்துள்ளார்.
தனது 16 ஆவது வயதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட ராஜாமணி பிரசாத், கடந்த காலங்களில் இளைஞர் அணி செயலாளராக செயலாற்றினார். அதற்கான நியமனத்தை அமரர் ஆறுமுகம் தொண்டமானால் வழங்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளராக நியமனம் பெற்றிருந்த காலப்பகுதியில் இவருடன் இணைந்து செயற்பட்டிருந்தார்.
அதேநேரத்தில் காங்கிரஸில் பதவி மாற்றம் இடம்பெற்ற சமயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானை காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளராகவும் இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்த சந்தர்ப்பத்தில் ராஜமணி பிரசாத் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரை காங்கிரஸ் உதவி செயலாளர்களாக இ.தொ கா. தேசியசபை நியமித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸின் சிறுவயது விசுவாசியாக இருந்து வந்த ராஜமணி பிரசாத்தை கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போட்டியிட ஆறுமுகம் தொண்டமான் நியமித்திருந்தார்.
கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிட்ட பிரசாத் வெற்றி பெற்று பிரதேச சபையின் தவிசாளரானார்.
காங்கிரஸின் இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவருக்கு இளைஞர் அணி தலைவராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
3 hours ago