Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை (ஜனாஸாக்களை), அடக்கம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய தனது அறிக்கையை, ஆழமாக ஆராயுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் நிலத்தடி நீர் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் தொடர்பில், குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். அவை தொடர்பில், வைத்திய நிபுணர்கள் ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு நானும் சென்றிருந்தேன். நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் உள்ள இடங்கள் குறித்துஇ பார்க்கும் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது என்றார்.
அதனடிப்படையில், நிலத்தடி நீர் ஆழத்தில் உள்ள பிரதேசங்கள் குறித்து ஆராயுமாறு, என்னுடைய அமைச்சின் புவிவியல் ஆய்வாளருக்குப் பணித்தேன். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம், 30 அடி ஆழத்துக்குத் தோண்டினாலும் நிலத்தடி நீர்வராத இரண்டு பிரதேசங்கள் குறித்துத் தகவல் எனக்கு வழங்கப்பட்டது.
இதில், மன்னார், மறிச்சுக்கட்டி பிரதேசமும் கிழக்கில் இறக்காமமும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த அறிக்கையை பிரதமரிடமும் சுகாதார அமைச்சரிடமும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ, இந்த அறிக்கையை வைத்தியர்களும் அவர்களது குழுவினரும் மீண்டும் ஆராய்ந்து பார்க்கலாம் என்றார்.
எனினும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சடலத்தில், வைரஸ் உயிருடன் இருப்பதால், அதைத் தகனம் செய்வதே தகுந்த முறை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதற்கு அடுத்தபடியான நிலை தொடர்பாக, இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலும் எந்தவொரு நாட்டிலிருந்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தகனம் செய்தால் மாத்திரமே இந்த வைரஸை முற்றாக அழிக்கலாம் என, நீதிமன்ற விசேட வைத்தியரும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான யூ.சீ.பி. பெரேரா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
40 minute ago
3 hours ago