2024 நவம்பர் 23, சனிக்கிழமை

”ஜனாதிபதி செயலகத்தில் எனக்கு விஷம் வைக்க வாய்ப்புள்ளது”

Simrith   / 2023 நவம்பர் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னர் கூறியதை மீண்டும் வலியுறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஒரு கோப்பை தண்ணீர் கூட குடிக்கப் போவதில்லை, ஏனென்றால் அதில் விஷம் கலந்திருக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார். 

"எனக்கு ஜனாதிபதி (விக்ரமசிங்க) மீது நம்பிக்கை உள்ளது, நான் அவரைப் பார்க்கச் செல்கிறேன். ஆனால் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒரு கோப்பை தண்ணீரைக் கூட நான் ஒருபோதும் குடிக்க மாட்டேன், ஏனெனில் அது விஷம் கலந்ததா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது," என்று அமைச்சர் குற்றம் சாட்டினார்.

அந்த அளவிற்கு எனது வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று அமைச்சர் கூறினார். 

தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் அனுமானிக்கும் சிலரின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்த அவர், கிரிக்கெட் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் தங்களால் முடிந்தால் தனக்கு விஷம் கொடுப்பார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக இருக்கும் சாகல ரத்நாயக்க “ஊழல்” மிக்க SLC அதிகாரிகள் மீது கருணை மிக்கவராக இருப்பதையும் அமைச்சர் சாடினார். 

"சிறப்பு தணிக்கை அறிக்கையில் ஊழல் செய்ததாகக் வெளிக்கொணரப்பட்ட கிரிக்கெட் சபை அதிகாரிகள் மீது அவர் ஏன் பரிவு காட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X