2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Editorial   / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தாலும், அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் உரிய முறையில் தயார்படுத்தப்பட்டு வருவதாக கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்காக அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்துள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் இன்றியும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். எல். ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .