2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சுமந்திரனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?

Editorial   / 2025 ஜனவரி 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .