Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 07 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை ஐவர் மரணித்துள்ளனர்.
முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தொடரும் மழையுடன் கூடிய வானிலையால், 12 மாவட்டங்களில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாள்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
09 Apr 2025